செய்திகள்

காணி உரித்துகள் நிருணயத் திணைக்கள புதிய இணையதளம்

காணி உரித்துகள் நிருணயத் திணைக்கள இணையதளம் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது.

மேலும் படிக்க...

தத்துவம்

ஒவ்வொரு காணிக்கும் நிருணய உரித்தொன்று.

எமது பணி

காணிகளை நிருணயம் செய்கின்ற மற்றும் உரித்துகளைப் பதிவு செய்கின்ற செயற்பாட்டின் மூலம் அரசாங்கக் காணிகளினதும் தனியார் காணிகளினதும் உரிமையைத் தீர்மானித்து, ஒவ்வொரு காணித்துண்டினதும் உரித்தை உறுதிப்படுத்துவதன் மூலம் இலங்கையில் முன்னேற்றகரமான காணி முகாமைத்துவ முறையொன்றுக்குப் பங்களிப்புச் செய்தல்.

நோக்கம்

 1. 1931ஆம் ஆண்டின் 20ஆம் இலக்கக் காணி நிருணயக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அரசாங்கக் காணிகளினதும் தனியார் காணிகளினதும் உரிமையைத் தீர்மானித்தல்.
 2. 1998ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க உரித்துகளைப் பதிவு செய்யும் சட்டத்தின் கீழ் உத்தியோகத்தர்களுக்கும் மக்களுக்கும் அறிவூட்டல், சொத்துக்களைப் பரிசீலித்தல், காணிப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவேடுகளைப் பரிசீலித்தல், உரித்து விண்ணப்பங்களைக் கோரல், உரித்துகள் மீது விசாரணைகளை நடத்துதல், பரிந்துரை செய்தல், அங்கீகரித்தல், உரித்துக்களைத் தீர்மானித்தல் மற்றும் அரசாங்க வர்த்தமானப் பத்திரிகையின் மூலம் மேற்படி தீர்மானங்களைப் பகிரங்கப்படுத்துதல்.
 3. நிறுவன ஆற்றலை வலுப்படுத்துவதன் மூலம் உரித்துக்களைப் பரிசீலனை செய்யும் மற்றும் தீர்மானிக்கும் பணிகளையும் காணிகளை நிர்ணயிக்கும் பணிகளையும் வினைத்திறன் மிக்க வகையிலும் பயனுறுதி மிக்க வகையிலும் நிறைவேற்றுதல்.
 4. மிகச் சிறந்த முறையில் செயற்படக்கூடிய உரித்துக்களைப் பரிசீலனை செய்யும் அலுவலகங்களைப் பிரதேச அடிப்படையில் நடத்துவதன் மூலம் உரித்துக்களைப் பதிவு செய்யும் செயற்பாட்டின் வினைத்திறனை மேம்படுத்துதல்.
 5. உரித்துக்களைப் பரிசீலனை செய்தல் மற்றும் தீர்மானித்தல் ஆகிய பணிகளின் அனைத்து நிலைகளுக்கும் பொதுமக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல்.
 6. காணி உரிமை தொடர்பான வினைத்திறன் மிக்கதும் நம்பத்தகுந்ததுமான தகவல் முறைமையொன்றை விருத்தி செய்தல் மற்றும் நடத்துதல்.
 7. வினைத்திறன் மிக்க நிர்வாக மற்றும் கணக்கீட்டு முறையொன்றைப் பேணுதல்.

அதிகாரங்கள்

1998ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க உரித்துக்களைப் பதிவு செய்யும் சட்டத்தின் பிரகாரம் இலங்கையின் அனைத்துக் காணித்துண்டுகளுக்கும் அரசாங்கம் பொறுப்புக் கூறுகின்ற உரித்துச் சான்றிதழ்களை வழங்குவதற்கு உரிய விசாரணைகளை மேற்கொள்தல் உண்மையான உரிமையைப் பிரகடனப்படுத்துதல் என்பவற்றிற்கான அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. (1998ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க உரித்துக்களைப் பதிவு செய்யும் சட்டத்தைப் பார்க்கவும்.)

1998 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க உரித்துக்களைப் பதிவு செய்யும் கட்டளைகளை நடைமுறைப்படுத்துதல். (1998 - 10 - 24 ஆம் திகதியிட்ட 1050 / 10ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியைப் பார்க்கவும்.)

திணைக்களப் பணிகள்

1. 1931ஆம் ஆண்டின் 20ஆம் இலக்கக் காணி நிருணயக் கட்டளைச் சட்டத்தின் கீழ் காணிகளை நிருணயிப்பது சம்பந்தப்பட்ட பணிகளை நடைமுறைப்படுத்துதல்.

 • நிருணயிக்கப்படவேண்டிய கிராமப் பிரதேசங்களைப் பிரகடனப்படுத்துதல்.
 • நிருணயிக்கும் உரித்து விசாரணைகளை நடத்துதல்.
 • நிருணயிக்கப்பட்ட காணிகளை அளந்து பிரிப்பதற்கு அனுப்புதல்.
 • நிருணயிக்கும் கட்டளை வர்த்தமானியைப் பகிரங்கப்படுத்துதல்.
 • நிருணயித்ததன் பின்னர் கிராமத்தை விடுவித்தல்.

2. 1998ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க உரித்துக்களைப் பதிவு செய்யும் சட்டத்தின் கீழ் உரித்துக்களைப் பதிவு செய்யும் சட்டத்தின் கீழ் உரித்துக்களைப் பதிவு செய்வது சம்பந்தப்பட்ட பணிகளை நடைமுறைப்படுத்துதல்.

 • உத்தியோகத்தர்களுக்கும் மக்களுக்கும் அறிவூட்டல்.
 • சொத்துக்கள் பற்றிய தகவல்களைப் பரிசீலனை செய்தல்.
 • ஒன்றிணைந்த துறைகளைப் பரிசீலனை செய்தல்.
 • காணிப் பதிவாளர் அலுவலகப் பதிவேடுகளைப் பரிசீலித்தல். (இருமடித்தாள் பரிசீலனை.)
 • உரித்து விண்ணப்பங்களைக் கோருவதற்காகச் சட்டத்தின் 12வது பிரிவின் கீழ் அறிவித்தல்களைப் பகிரங்கப்படுத்துதல்.
 • உரித்துக்களை ஒப்பிட்டுப் பார்த்துப் பரிந்துரைகளையும் அங்கீகாரத்தையும் வழங்குதல்.
 • உரித்துத் தீர்மானங்களை வர்த்தமானியில் வெளியிடல்.
 • உரித்துத் தீர்மானங்களைக் காணிப் பதிவாளர், சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆற்றுப்படுத்துதல்.

பொதுச் செயல்கள்

 1. உரித்துக்களைப் பரிசீலனை செய்தல், தீர்மானித்தல் ஆகிய பணிகளின்போதும் காணி நிருணயப் பணிகளின்போதும் சம்பந்தப்பட்ட ஏனைய நிறுவனங்களுடன் தொடர்பை ஏற்படுத்தல்.
 2. பணியாட்டொகுதியினரின் கடமைகளை வினைத்திறன் மிக்க முறையில் மேற்கொள்வதற்கு உரிய பயிற்சிகளையும் ஏனைய வளங்களையும் தேவைகளை இனங்கண்டு வழங்குதல்.
 3. உரித்துப் பரிசீலனைகள், தீர்மானிக்கும் பணிகள் என்பவற்றிற்கும் காணிகளை நிருணயிக்கும் பணிக்கும் செயலாற்றுகைச் சுட்டிகளைத் தயாரித்தல் மற்றும் செயலாற்றுகையை மேற்பார்வை செய்தல்.
 4. உரித்துக்களைப் பரிசீலனை செய்யும் மற்றும் தீர்மானிக்கும் பணிகளின்போதும் காணி நிருணயப் பணிகளின்போதும் முன்னேற்றத்தை மாதாந்தம் அமைச்சுக்கு அறிவித்தல்.
 5. காணி நிருணயம் சம்பந்தப்பட்ட பழைய, பெறுமதியான பதிவேடுகளைப் பேணிப் பாதுகாப்பதற்காக வினைத்திறன் மிக்க பதிவேட்டுப் பாதுகாப்பு முறைமையொன்றைப் பேணுதல்.
 6. உரித்துக்களைப் பதிவு செய்வது தொடர்பாகப் பொதுமக்களின் புரிந்துணர்வை மேம்படுத்துதல் மற்றும் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு விழிப்புணர்வூட்டும் கூட்டங்களையும் கலந்துரையாடல்களையும் செயலமர்வுகளையும் நடத்துதல்.
 7. பிரதேச அலுவலகங்களில் பணியாட்டொகுதியினரைப் பராமரித்தல் மற்றும் அவர்களுக்குத் தேவையான வளங்களைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம் பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்பளித்தல்.
 8. வருடாந்த மதிப்பீடுகள், ஒதுக்கீட்டுக் கணக்குகள், அரசாங்க உத்தியோகத்தர்களின் மதிப்பீட்டுக் கணக்குகள் மற்றும் மாதாந்தக் கணக்குச் சுருக்க அறிக்கைகளைத் தயாரித்தல்.