செய்திகள்

காணி உரித்துகள் நிருணயத் திணைக்கள புதிய இணையதளம்

காணி உரித்துகள் நிருணயத் திணைக்கள இணையதளம் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது.

மேலும் படிக்க...

உரித்துச் சான்றிதழ் என்றால் என்ன?

காணியொன்றின் உரிமையை எடுத்துக் கூறுவதற்காகத் தற்பொழுது பயன்படுத்தப்படுகின்ற உரித்துறுதிக்குப் பதிலாக வழங்கப்படுகின்ற சான்றிதழ் உரித்துச் சான்றிதழ் எனக் குறிப்பிடப்படுகிறது.

காணியின் உரிமைக்காகக் காணி உறுதி இருக்கின்றபோது உரித்துச் சான்றிதழ் வழங்கப்படுவது ஏன்?

உறுதி என்பது.....

ஏதேனும் ஒரு காணி தொடர்பில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் (விற்பனை/ஒப்படைப்பு/ஈடு/இடையில் பிரித்தல்.....) தொடர்பாகக் குறிப்பிடப்படுகின்ற சட்ட ரீதியான பத்திரமாகும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான பத்திரத்தை (காணி உறுதியை)ப் பதிவு செய்யும் பணிகள் சம்பந்தப்பட்ட பிரதேசத்தின் காணிப் பதிவாளர் அலுவலகத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. உறுதி சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றது என்பதற்கான பத்திரமாக இருக்கின்ற அதேவேளை காணியின் உரித்துத் தொடர்பான தெளிவான சான்றிதழ் அல்ல.

உரித்துப் பதிவு மற்றும் உரித்துச் சான்றிதழ் என்றால் என்ன?

உரித்துப் பதிவு என்பது உரித்துறுதியைவிட ஒழுங்கு முறையாகக் காணியொன்றின் உரித்தைப் பதிவு செய்து அதன் பின் கொடுக்கல் வாங்கல்களை மிக எளிதான முறையில் இலகுவாகச் செய்து கொள்ளக்கூடிய முன்னேற்றகரமான காணி முகாமைத்துவ முறையாகும். உரித்துச் சான்றிதழ் என்பது அந்த முன்னேற்றகரமான காணி முகாமைத்துவ முறையின் மூலம் காணி உரித்திற்காக வழங்கப்படுகின்ற சான்றிதழாகும். உரித்துறுதியின் மூலம் உரித்துறுதியில் குறிப்பிடப்பட்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பான பதிவு நடைபெறுகிறது. காணியின் உரிமை அதாவது உரித்துப் பதிவு நடைபெறாது. உரித்துச் சான்றிதழ் மூலம் அக்காணியின் உரித்து மற்றும் அக்காணிப் பதிவும் இடம்பெறுகிறது. உரித்துறுதியில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை வாசித்துப் புரிந்துகொள்வது கஸ்டமாக இருப்பினும், உரித்துச் சான்றிதழ் வாசித்துப் புரிந்துகொள்ளக்கூடிய பாதுகாப்பான பத்திரமாகும். கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதும் இலகுவானதாகும். உரித்துச் சான்றிதழில் காணி தொடர்பான வரைபடமும் குறிப்பிடப்பட்டிருப்பினும் உரித்துறுதியடன் வரைபடக் குறிப்பை வைப்பது பெரும்பாலும் நிகழ்வதில்லை.

1998ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க உரித்துக்களைப் பதிவு செய்யும் சட்டத்தின் மூலம் உரித்தைப் பதிவு செய்வதற்கு உரிய சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உரித்துச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வது எப்படி?

1998ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க உரித்துக்களைப் பதிவு செய்யும் சட்டத்தின் பிரகாரம் உரித்துப் பதிவு செய்யப்பட்டவுடன் பழைய உரித்துறுதி செல்லுபடியற்றதாகும். பழைய உரித்துறுதிக்குப் பதிலாகக் காணி உரிமையாளருக்கு உரித்துச் சான்றிதழ் ஒன்று வழங்கப்படும். உரித்துச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் இடம்பெறுகின்ற விற்பனை, ஈடுவைத்தல், பரிசாக அளித்தல், ஒப்படைத்தல், குத்தகைக்குக் கொடுத்தல், தடை எச்சரிக்கையைப் பெற்றுக்கொள்ளல், ஒன்றிணைத்தல், இடைக்காலப் பிரிவினை என்பவை உள்ளிட்ட அனைத்துக் கொடுக்கல் வாங்கல்கள் உரித்துப் பதிவு முறையின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட செயலாற்றுப் பத்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. எண்பித்தற் பத்திரம் என்பது ஒவ்வொரு கொடுக்கல் வாங்கலுக்கும் வெவ்வேறாகப் பயன்படுத்துகின்ற பத்திரமாகும். செயலாற்றுப் பத்திரத்தை 7 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்வதற்காகக் குறிப்பிட்ட பிரதேசத்தின் உரித்துப் பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் உரித்துச் சான்றிதழின் மூலப்பிரதி, குறிப்பிட்ட உள்ளூராட்சி நிறுவனத்திற்கு முத்திரைக் கட்டணம் மற்றும் உரித்துப் பதிவாளருக்குப் பதிவுக் கட்டணம் என்பவற்றைச் செலுத்தி அவற்றின் பற்றுச்சீட்டுகளுடன் சமர்ப்பிக்க வேண்டும்.