செய்திகள்

காணி உரித்துகள் நிருணயத் திணைக்கள புதிய இணையதளம்

காணி உரித்துகள் நிருணயத் திணைக்கள இணையதளம் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது.

மேலும் படிக்க...

 

இலங்கையில் அமைந்துள்ள தனியார் காணிகளைப் பதிவு செய்யும் முறை போர்த்துக்கீசரின் ஆட்சிக் காலத்தில் கரையோரப் பிரதேசங்களில் முதலில் ஆரம்பிக்கப்பட்டாலும் ஆங்கிலேயர் இலங்கையைக் கைப்பற்றியதன் பின்னர் 1863ல் அறிமுகப்படுத்திய ஆவணங்களைப் பதிவு செய்யும் கட்டளைச் சட்டத்தின் மூலம் இப்பொழுது நாட்டில் நடைமுறையில் இருக்கின்ற காணி கொடுக்கல் வாங்கல் பதிவு ஆரம்பமானது. இருதரப்பினருக்கு அல்லது பல தரப்பினர்களுக்கிடையில் காணியொன்றின் உரித்து மாறுவதற்காக நொத்தாரிசு ஒருவரின் ஊடாக முறையான பத்திரமொன்றை (உரித்துறுதியை)த் தயாரித்துக் காணிப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வதன் மூலம் அனுபவ உரிமையை ஒப்படைத்து இக்கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் நடைபெறுகிறது. இச்செயற்பாட்டின்போது ஒப்படைப்பாளருக்கு உண்மையிலேயே காணிக்கு உரித்து இருக்கவேண்டும். அத்தகைய உரித்து உண்மையிலே இல்லாதவிடத்து ஒப்படைப்பாளருக்கு உரிய உரித்துக் கிடைக்காமற்போகும்.

 

இத்தகைய நிலைமைகளின் கீழ்,

  • காணிப் பிணக்குகள் ஏற்படல்.
  • காணி வழக்குகள் ஏற்படல்.
  • சமூகங்களுக்கிடையே சமாதானம் முறிவடைதல்.
  • மோசடியான முறையில் காணி கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறுதல்.
  • காணிகளில் விளைச்சல் குறைதல்.
  • ஒழுங்கான காணி முகாமைத்துவம் இல்லாமற்போதல் மூலம் அரசாங்கத்துக்குக் கிடைக்க வேண்டிய வருமானம் கிடைக்காமை.

போன்ற சிக்கல்களினால் காணி உரித்தாளர்களுக்குப் போன்று இலங்கையிலும் சமூக, பொருளாதார அபிவிருத்திக்கும் பாதகமான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

 

காணி உரித்தாளர்கள் எதிர்நோக்குகின்ற இப்பாதகமான நிலைகளை ஒழிப்பதையும், காணி அபிவிருத்திக்கு உதவச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டு ஆட்களுக்குரிய காணிகளுக்கு அரசாங்கம் பொறுப்புக்கூறுகின்ற சரியான எல்லைகளைக் காட்டுகின்ற, வரைபடம் ஒன்றுடனான உரித்து உறுதிப்படுத்தப்படுகின்ற பெறுமதியுள்ள உரித்து சான்றிதலொன்றை வழங்கும் வேலைத்திட்டம் 1998ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க உரித்துகளைப் பதிவு செய்யும் சட்டம் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டதன் மூலம் ஆரம்பிக்கப்பட்டது. தனிப்பட்ட ஆட்களின் உரிமையைப் போன்று அரசாங்கத்துக்குரிய காணிகளின் உரிமையும் இச்சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தப்படுவதனால் நாட்டின் அபிவிருத்திக்குத் தகுந்த காணிகளை அடையாளம் காணக்கூடியதாக இருப்பதும் இச்சட்டத்தின் மூலம் கிடைக்கின்ற இன்னுமொரு நன்மையாகும்.

 

1925, 1955, 1985 ஆகிய ஆண்டுகளில் அப்போதைய அரசாங்கங்களால் நியமிக்கப்பட்ட காணி ஆணைக்குழுக்களும் கடந்த காலப் பகுதியில் இடம்பெற்ற இளைஞர் கிளர்ச்சிகளுக்குக் காரணமாக இருந்த அடிப்படை விடயங்கள் தொடர்பில் விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களும் காணி உரித்துத் தொடர்பாக நிலவிய சமநிலையின்மை மற்றும் ஆட்களுக்குக் காணிகள் இல்லாமை மக்களுடைய விரக்திக்கு அடிப்படைக் காரணமாகும் எனத் தெரிவித்திருந்தன. இந்த சமூக விரக்திக்குத் தீர்வாக அவ்வாணைக்குழுக்களின் அறிக்கைகளில் கவனம் செலுத்தி 1998ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க உரித்துகளைப் பதிவு செய்யும் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.